முதலில் கிளன்சிங் பிறகு மசாஜ், ஸ்கிரப், பேக் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். கிளன்சிங்காக பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.
தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக் கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன் இருக்கும்.
மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றை அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்த வேண்டும். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும்.
பேக் போட கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றை அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இந்த பேசியல் செய்த உடனே கண்கள் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும் அழகாகவும், பொலிவுடனும் மாறும்.