இயற்கையான முறையில் கடலை மாவு ஃபேஸ் பேக் செய்வது எப்படி..?

கடலை மாவு அழகு குறிப்பு முறையினை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், சரும பொலிவு மேம்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும்  காணப்படும்.

 
கடலை மாவு ஃபேஸ் பேக் 1: 
 
சருமத்தில் உள்ள பருக்கள் நீங்க இது ஒரு சிறந்த வழி. ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் கிரீன் டீ இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும், பின்பு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும்.
 
கடலை மாவு ஃபேஸ்பேக் 2: 
 
சிலருக்கு சருமம் எப்பொழுதும் வறண்டு காணப்படும் அவர்களுக்கு, கடலை மாவை கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காயவைத்து, நீரில் கழுவுங்கள். இப்படி இந்த கடலை மாவு அழகு குறிப்பு முறையினை வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் வறட்சியடையாமல்  ஈரப்பசையுடன் இருக்கும்.
 
கடலை மாவு ஃபேஸ் பேக் 3:
 
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த கடலை மாவு அழகு குறிப்பு முறையினை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்