முடி கொட்டுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:39 IST)
முடி கொட்டுவதற்கு உடலில் ஹார்மோன்களின் அளவு சீரான அளவு இல்லாத பட்சத்தில் முடி கொட்டுதல் அதிக அளவு காணப்படும்.


முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும்.

உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும். சராசரியாக ஒரு நாளுக்கு 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் முடி நிச்சயமாகக் கொட்டத் தொடங்கும்.

வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு, பேன், தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும், பளபளப்பாக மாறி, அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்