வறண்ட சருமத்தை சரிசெய்ய உதவும் அற்புத அழகு குறிப்புகள் !!

வறண்ட சருமத்திற்கு காபி கொட்டைகள் ஒரு நல்ல தீர்வாகும். காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். 

இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது.
 
வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளிக்கவும். மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுக்கவும். க்ளென்சிங் க்ரீமை ஒரு கிண்ணத்தில் போடவும். நைசாக அரைத்த சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டையும் கலந்து கெட்டியான பேஸ்டை உருவாக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு சூழல் வடிவில் தேய்க்கவும். இந்த கலவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். 
 
நன்றாக தேய்த்தவுடன் துணியால் அந்த கலவையை முகத்தில் இருந்து நீக்கவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வறண்ட சருமத்திற்கான இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள துளைகளை மூடி, முகத்தை பொலிவாக்கும்.
 
வறண்ட சருமத்திற்கு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப்கள் நல்ல தீர்வை கொடுக்கும். அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை சேர்ப்பதால் இந்த ஸ்க்ரப்க்கு சுத்திகரிக்கும் தன்மை கிடைக்கிறது. 
 
முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
 
பாதாம் சிலவற்றை எடுத்து அரைத்து கொள்ளவும். 1 கப் அரைத்த பாதாமுடன், சிறிது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு, ரோஜா எண்ணெய், லவெண்டேர் எண்ணெய் போன்றவற்றில் எதாவது ஒன்றை நறுமணத்திற்காக சேர்க்கலாம். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். சூழல் வடிவில் சில நிமிடங்கள் தேய்த்த பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்