முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புத குறிப்புகள் !!

முடி கொட்டுதல், அடிக்கடி பூச்சி வெட்டு ஏற்படுதல், விரைவில் நரை முடி வருதல், போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கையான ஆயுர்வேத முறையை நீங்கள் பின்பற்றலாம். 

நெல்லிக்காய் மற்றும் சீயக்காய் இவை இரண்டும் உங்கள் தலையில் இருக்கும் பொடுகை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ளது. இது பொடுகை அகற்றுவது மட்டுமில்லாமல் தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்கி தலையைச் சுத்தமாக வைக்க உதவுகிறது. 
 
நெல்லிக்காய் உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைத்து முடியின் வேர்ப்பகுதியை உறுதியானதாக மாற்றி விரைவில் நரை முடி ஏற்படாமல் பாதுகாக்கும். 1 கப் நெல்லிக்காய் தூள் மற்றும் அரை கப் சீயக்காய்த்தூள் இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து ஒருமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை விட்டுவிட்டு பின்னர் அலசுங்கள்.
 
வறுத்த வெந்தய தூள் ஒரு கப் , அத்துடன் நெல்லிக்காய் தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்தநாள் காலையில் எழுந்து அந்த கலவையை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்பு அலசுங்கள்.
 
ஒரு கை முழுவதுமாக வேப்பிலை இலைகளை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வையுங்கள். அடுத்தநாள் காலையில் அந்த இலைகளை எடுத்து அரைத்து அத்துடன் நான்கு தேக்கரண்டியளவு நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலக்கி உச்சந்தலை மற்றும் முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
 
மூன்று தேக்கரண்டியளவு செம்பருத்தி பவுடர், 1/4 கப் தயிர், இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் கலந்து கலவையாகக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாகக் கலந்து முடியில் 20 நிமிடங்கள் வைத்து அலசுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்