உணவு மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியும். சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம்.
கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை குறைவாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து உண்ணலாம்.
மது அருந்துதல் அமிலத்தன்மையை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்க்கும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.