உணவு பழக்கவழக்கம், வேலைச்சுமை, மன அழுத்தம் என மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் எளிதில் உணர்ச்சிவசபடக் கூடியவர்கள். அதிக எடை கொண்ட பெண்களுக்கு, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளது.