சம்மர் சீசனில் பெரும்பாலும் பலர் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடும்போது உடன் சிலவற்றை சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுகுறித்து காண்போம்.
மாம்பழமும் பாகற்காயும் எதிரெதிர் சுவை கொண்டவை என்பதால் ஒரே சமயத்தில் இரண்டையும் சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து குடிப்பது நல்லது
மாம்பழம் சூடு என்றால், தயிர் குளிர்ச்சியானது. எனவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு கார்பனேற்ற குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகளுடன் இனிப்பான மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
சாலட் தயாரிக்கும்போது மாம்பழம், தர்பூசணியை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்