உடலை வலிமையாக வைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை எடுக்கின்றனர். புரோட்டீன் உணவு மற்றும் பவுடர்களை அதிக அளவு எடுத்தால் சில கேடுகளையும் விளைவிக்கலாம்.
உடலில் தசைகள், திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க புரோட்டீன் அவசியமாக உள்ளது.
அதிக அளவு புரோட்டீன் உட்கொள்வது கலோரி உட்கொள்வதை குறைத்து எடை இழக்க உதவும்.
அதிக அளவு புரோட்டீன் எடுக்கும்போது சிறுநீரகத்தை அது பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதிக புரோட்டீன் உட்கொள்வது சிறுநீரின் மூலம் அதிகமான நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
அதிக புரோட்டீனால் உடலுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
வயது, பாலின, சுகாதார நிலை பொறுத்து எடுக்க வேண்டிய புரோட்டீன் அளவு மாறுபடும்.
குறிப்பு: புரோட்டீன் உணவு குறித்த மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.