சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் தூக்கம் வராதா?

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (20:11 IST)
சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது என்றும் தூக்கம் நன்றாக வரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடுகிறது என்றும் அது மட்டும் இன்றி சர்க்கரை அளவு குறைந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனை சர்க்கரை நோயாளிக்கு இருக்கும் என்பதால் சரியாக தூங்க முடிவதில்லை. சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்