ரம்புட்டானில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், அதிகப்படியாக சாப்பிடும் எண்ணம் குறையும்.
இதில் பாஸ்பரஸ் இருப்பதால், சிறுநீரகத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.ரம்புட்டானை தொடர்ந்து சாப்பிடுவதால் தோல், முடி மற்றும் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.