உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரித்துக்கொள்ளலாம்.
# தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும்.
# பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவல் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
# சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், எண்ணெய் பசை நீங்கும்.