ஜெ. மருத்துவ அறிக்கை: சந்தேகம் எழுப்பும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்!

சனி, 30 செப்டம்பர் 2017 (09:04 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதும் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கிடைத்த மருத்துவ அறிக்கையை பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது.


 
 
அதில் இடம்பெற்றிருந்த தகவல்கள் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை மேலும் மேலும் அதிகரிக்கின்றது. மேலும் இந்த மருத்துவ அறிக்கையின் மீதே பலருக்கும் சந்தேகம் வலுத்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.


 
 
தற்போது பாஜக மூத்த தலைவராக இருக்கும் எச்.வி.ஹண்டே நேற்று வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு முன்னர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வந்த மருத்துவர்கள் யார்? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனரா? ஜெயலலிதாவுக்கு முழு உடல் பரிசோதனை ஏதும் செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும், ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு 508 எம்.ஜி. ஆக இருந்தது ஏன்? ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தது ஏன்? என்று ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை குழு விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்