மிகவும் அதிகம் கிடைக்கும் அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் களாக்காய் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவில் உடலுக்கு நல்லது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்டாய்ந்த களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து மாங்கனிசியம் பொட்டாசியம் காப்பர் உள்பட பல சத்துக்கள் இந்த களாக்காயயில் உள்ளன. கலா
களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும்.
தலை முடியை வலிமையாக்கும், கூந்தல் ஆரோக்கியமாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த உதவும் ஆகிய பல நன்மைகள் களாக்காய் சாப்பிடுவதால் உண்டாகிறது.