தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (19:25 IST)
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 தூங்குவதற்கு முன்னர் காபி டீ பருகுவது உடல்நலத்தை பாதிக்கும் என்பது போல் தண்ணீர் எடுத்துக் கொண்டாலும் ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
பொதுவான நல்ல உடல்நிலை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது உடல் நிலையை கட்டுக்குள் வைத்த உதவும். மேலும் உடல் சூடாக இருந்தால் குளிரவைக்கும். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதும் உறுதி செய்யப்படும். 
 
ஆனால் அதே நேரத்தில் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது ஒரு சிலரின் உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது. அது தூக்கத்தை தொந்தரவு செய்வது மட்டுமின்றி நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டிய நிலையில் ஏற்படும். 
 
எனவே உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்