தேயிலைச் செடியின் குருத்துகள் வெள்ளை நிற இலைகளால் மூடப்பட்டு இருப்பதால் இதற்கு ஒயிட் டீ என்ற பெயர் உண்டானது. இந்த டீ குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்பதும் இதயம், சருமம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் ஒயிட் டீயில் இருப்பதால் இதனை தொடர்ச்சியாக குடிப்பதால் சருமத்தின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுப்பதோடு, தோல் நோய்களை தடுக்கும்.