இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா!

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

 
* சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால்,  மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
 
சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
 
சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
 
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும்  சப்போட்டா பழத்துக்கு உண்டு.
 
தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி  குணமாகும்.
 
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம்  கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்