வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.
வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.