ஏப்பம் வருவது இயல்பானதா? நோயின் அறிகுறியா?

வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:56 IST)
ஏப்பம் வருவது இயல்பானதா? நோயின் அறிகுறியா?
மனிதர்களுக்கு அவ்வப்போது ஏப்பம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அடிக்கடி ஏப்பம் வருவது நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. 
 
நாம் உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும்போது காற்றையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறோம். அப்போது இறைப்பை அந்த காற்றை ஏப்பமாக வெளியேற்றும் என்பது குறிபிடத்தக்கது
 
இறைப்பையில் உள்ள காற்றை வெளியேற்றும் ஏப்பம் என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதே நேரத்தில் அடிக்கடி ஏப்பம் வருவது நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது
 
வேகமாக சாப்பிடுவது, வேகமாக தண்ணீர் குடிப்பது போன்ற காரணங்களாலும்,  இரவில் தாமதமாக சாப்பிடுவது, மசாலா உணவுகளை அதிகம் சாப்பிடுவது அதிக ஏப்பம் வர காரணமாக உள்ளது.
 
மசாலா உணவுகளால் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகம் ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உடனே ஏப்பம் உண்டாகும். இது அஜீரண கோளாறு என்ற நோயின் அறிகுறியை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே உணவு கட்டுப்பாட்டில் நாம் சிறப்பாக இருந்தால் ஏப்பத்தை தவிர்க்கலாம். குறிப்பாக கீரை வகைகள் சோம்பு சீரகம் இஞ்சி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஏப்பத்தை தடுக்க முடியும்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்