இனிப்பான கேக்குகளில் உள்ள கசப்பான தீமைகள்....

திங்கள், 11 ஜூன் 2018 (18:38 IST)
கேக் பலருக்கும் பிடித்த ஓர் உணவுப் பொருள். கேக்குள் ஜங்க் உணவுகளுள் ஒன்று. ஜங்க் உணவுகள் சுவை மொட்டுக்களுக்கு விருந்தாக இருக்கலாம், ஆனால் அதே சமயம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
 
கேக்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள், உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிக்கும். 
 
மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரித்து, உடலின் இதர செயல்பாட்டையும் பாதிக்கும்.
 
கேக்கில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். 
 
கேக்கில் கொழுப்புக்கள் அதிகம் என்பதால், அதிகளவு கேக்கை சாப்பிடும் போது, அது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
 
சில கேக்குகளில் சேர்க்கப்படும் மாரிஜூவானா மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் ஏற்ற இறக்கமான மனநிலை, மன இறுக்கம், பதட்டம், அதிக உணர்ச்சிவசப்படுதல் போன்றவை அடக்கம்.
 
கேக்குகளில் சேர்க்கப்படும் நிறமூட்டும் பூச்சுக்கள், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் மயக்கம், தளர்ந்து போதல், பலவீனமான உணர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்