இருமலை (Cough) போக்கும் அக்குபங்க்சர்!!

திங்கள், 19 டிசம்பர் 2016 (10:59 IST)
மழை காலம், குளிர் காலம் என்று நினைக்கும்போது நம் நினைவுக்கு வருவது குளிர், குடை மட்டும் இல்லை இருமலும் தான்!

 
சுவாசப்பாதையில் ஏற்படும் பிரச்சினை, நோய் தொற்று ஏற்படும்பொழுது இந்த இருமல் ஏற்படுகிறது. சளி மற்றும் கோழையை நுரையீரல் வெளித்தள்ளும் நிகழ்வுதான் இருமல் என்றழைக்கப்படுகிறது. காற்று நுரையீரலுக்குள் இழுக்கப்பட்டு வெளித்தள்ளப்படும்போது மூச்சுக்குழலின் மூடிய நிலையில் இருக்கும் அழுத்தம் நம் வாய் திறக்கும்போது காற்று வேகமாக வெளித்தள்ளப்படுகிறது. இதுவே இருமல்!
 
இது குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும். நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் இருமலில் இருந்து தப்பிக்கலாம். மழைகாலங்களில் உணவில் சற்று அதிகமாக மஞ்சளை சேர்க்கும் பட்சத்திலோ அல்லது வெதுவெதுப்பான நீரில் சற்று மஞ்சள் தூளை கலந்து பருகுவதாலும் நோய் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
 
இருமல் ஆட்கொண்டால் கீழ்காணும் அக்குபுள்ளிகளை உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இருமலுக்கு சிறந்த தீர்வை காணலாம்.
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்









 

வெப்துனியாவைப் படிக்கவும்