ஏடிஎம் ரசீதுக்கும் ஆண்மைக்குறைவுக்கும் என்ன சம்மந்தம்? அதிர்ச்சி தகவல்

புதன், 3 மே 2017 (06:20 IST)
தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன், லேப்டாப் உள்பட பல உபகரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஏடிஎம் ரசீதுக்கும் ஆண்மைக்குறைவுக்கும் சம்மந்தம் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



 


செக்ஸ் விஷயத்துக்கு ஆண்மைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, ஏடிஎம் மெஷின்கள் எப்படி ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என்றுதானே கேள்வி கேட்கின்றீர்கள். அதற்கான பதில் இதுதான். ஏடிஎம் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை ஆகிய இரண்டுமே ஆண்மைக்குறைவு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதே போல, லாட்டரி டிக்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் ரசீதுகளும் இந்த பிரச்சனை ஏற்படுத்துமாம்.

இதற்கு முக்கிய காரணம்  ஏடிஎம் ரசீதில் பிஸ்பினால்-ஏ என்ற ரசாயனம் அதிகளவில் காணப்படுவதுதான். இது ஆண்களின் உடலில் ஆஸ்டிரோஜென் எனும் ஹார்மோனை, அதிகளவில் சுரக்கவைப்பதால், இந்த விறைப்பு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏடிஎம் ரசீதை கையாளும்போது இனி கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் கையுறை அணிந்து கொள்ளுங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்