தீபாவளியை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் சியோமி தீபாவளி ஆஃபர்களை வழங்கியுள்ளது.
ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளாஷ் விற்பனை Mi.com வலைதளத்தில் அக்டோபர் 24 (இன்று) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.