சியோமி நிறுவனம் ரூ.4,80,000 விலையில் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஆம், சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,80,000. இந்த விலையில் விற்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனின் என்ன ஸ்பெஷல் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்டுகளே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.4,80,000. ஆனால், எந்த விலையில் விற்பனைக்கு வரும், எப்போது வரும் என்ற தகவல் சியோமி தரப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.