ஆட்டம் காணப்போகும் ஏர்டெல், ஐடியா, வோடோபோன்; அதிரடி முடிவுகளுடன் டிராய்!!
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:05 IST)
தொலைதொடர்பு நிறுவனங்கள் வசூலிக்கும் இண்டர்கனெக்ட் கட்டணங்களை குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளது.
இண்டர்கனெக்ட் கட்டணங்களின் விலை குறைக்கப்படுவதன் மூலம் வாய்ஸ் கால் கட்டணங்கள் வெகுவாக குறையும்.
ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க் நம்பரில் இருந்து மற்ற நெட்வொர்க் நம்பருக்கு கால்செய்தால், அந்த அழைப்பை இணைக்க டெலிகாம் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி வருகின்றன. இந்த தொகை இண்டர்கனெக்ட் கட்டணம் என அழைக்கப்படுகிறது.
இந்த தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாய்ஸ் கால்களுக்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த கட்டணங்களை குறைக்க டிராய் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது, இண்டர்கனெக்ட் கட்டணம் நிமிடத்திற்கு 14 பைசாவில் இருந்து 10 பைசாவாக குறைக்கக்கபட உள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் ஏர்டெல, ஐடியா மற்றும் வோடோபோன் இண்டர்கனெக்ட் இணைப்பை இருமடங்கு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கையை தகர்த்தும்படியான முடிவை டிராய் எடுத்துள்ளதால், மேற்சொன்ன நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட கூடும் என தெரிகிறது.