நேற்றைய பயங்கர ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்தது பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:43 IST)
நேற்று பங்குச்சந்தை பயங்கரமாக உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தது என்று கூறலாம். நேற்று சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்ததால்  லட்சக்கணக்கில் பலர் லாபம் பெற்றனர். 
 
இந்த நிலையில் இன்று சற்றே பங்கு சந்தை சரிந்துள்ளது. பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை  சென்செக்ஸ் 116 புள்ளிகள் சரிந்து 71 ஆயிரத்து 835 என வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையில் அதாவது 21 ஆயிரத்து 738 என்ற நிலையில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் நிஃப்டி 50, நிப்டி ஐடி,  ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வாங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் 47 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்