பங்குச்சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

செவ்வாய், 14 மே 2024 (11:28 IST)
பங்குச்சந்தை நேற்று ஆரம்பத்தில் 500 புள்ளிகள் சரிந்து இருந்தாலும் வர்த்தகம் முடியும் போது 100 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 200 புள்ளிகளுக்கு மேல் அதிகமாக உயர்ந்து 72,985 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதை போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 22172 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
பங்குச்சந்தை இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் உயர்ந்துள்ளதை அடுத்து தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் முடிவடையும் நிலையில் இருப்பதால் ரிசல்ட் வந்தவுடன் பங்குச்சந்தை உயரும் என்றும் பங்குச்சந்தைக்கு இனி நல்ல எதிர்காலம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் எச்டிஎப்சி வங்கி, இண்டஸ் பேங்க் ,கோடக் மகேந்திரா வங்கி, மாருதி உள்ளிட்ட வங்கிகள் அதிகரித்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் பக்கங்கள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்