கட்டணமில்லா கிரெடிட் கார்ட்; ஆனால்... எஸ்பிஐ செக்!!

வியாழன், 30 மார்ச் 2017 (10:24 IST)
கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவது வங்கிகளின் வழக்கம். 


 
 
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கார்டு நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பை 74 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 
 
இதையடுத்து, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.20,000 அல்லது அதற்கும் மேலாக, சேமிப்பு வைத்துள்ள வங்கிக் கணக்குகளுக்கு, கட்டணமில்லா கிரெடிட் கார்டு வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் எஸ்பிஐ வங்கி 30 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் போதிய சேமிப்பு தொகை இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது, வங்கிக் கணக்குகளின் சேமிப்பு தொகை அதிகளவில் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணமில்லா கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்