சாம்சங் நிறுவன தலைவருக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (14:05 IST)
தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவன துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
2015ஆம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது தேசிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீ மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் லீயிடம் தொடர்ந்து 22 மணி நேரம் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்