குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன் விலை: எவ்வளவு தெரியுமா?
திங்கள், 29 ஏப்ரல் 2019 (12:15 IST)
கொரிய நிறுவனமான சாம்சங் தனது சமீபத்திய அறிமுகமான கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு...
விலை பட்டியல்:
# கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,17,900
# கேலக்ஸி எஸ்10 512 ஜிபி மாடல் ரூ.84,900
# கேலக்ஸி எஸ்10 128 ஜிபி மாடல் ரூ.66,900 என
# கேலக்ஸி எஸ்10இ 128 ஜிபி மாடல் ரூ.55,900
சாம்சங் சலுகைகள்:
1. சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
2. கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனை மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம்.
3. கேலக்ஸி எஸ்10 128 ஜிபி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.6000 கேஷ்பேக் வழங்கப்படும்.
4. இதே ஸ்மார்ட்போனை மற்ற கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும்.
5. கேலக்ஸி எஸ்10 512 ஜிபி மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
6. கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜிபி, 512 ஜிபி அல்லது 1000 ஜிபி வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகள் மீது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.