சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் பார்தி பவுன்டேஷன் அமைப்பிற்காக பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துகள், அதாவது ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்.
இந்த பல்கலைக் கழகம் அறிவியல் தொழில்நுட்ப கல்விக்கு முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையதள புத்தாக்கம் போன்ற கல்விக்கு முன்னுரிமை அளிக்குமாம்.
இந்த பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் 10,000 மாணவர்கள் கல்வி கற்கும் வசதி இருக்கும். ஆனால், பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.