பயந்துட்டியா குமாரு... ஜியோவை கட்டம் கட்டிய ஏர்டெல், வோடபோன் ஐடியா!

திங்கள், 9 டிசம்பர் 2019 (11:56 IST)
ஏர்டெல், வோடபோன் அன்லிமிட்டெட் கால் அறிவிப்புக்கு வழக்கத்திர்கு மாறாக பதில் அளித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ தரப்பு. 
 
டிசம்பர் 3 ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு துறையின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். 
 
இந்நிலையில் வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுவதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆம், வேறு நெட்வொர்க்குகளுக்கு பேசினால் இனி கட்டணம் என்றும், நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ சமீபத்தில் அறிவித்த நிலையில் வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. 
இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ந்து போன ரிலையன்ஸ் ஜியோ தரப்பு வழக்கத்திற்கு மாறாக, ஜியோ ஆல் இன் ஒன் பிளான் மூலம் பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது. 
 
மேலும், மற்ற ஆப்ரேட்டர்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ திட்டங்கள் 25% அதிக மதிப்பை வழங்குகின்றன என்றும் ஜியோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஜியோ சருக்களை சந்திக்க உள்ளது என்பது மட்டும் தெரிறது. இருப்பினும் இதனை ஈடுக்கட்டும் வகையில் ஜியோ ஏதேனும் சலுகைகளை அறிவிக்கும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்