5ஜி ஸ்மார்ட்போன்: இந்திய மார்க்கெட்டில் சீன ஆதிக்கம்!
திங்கள், 11 மார்ச் 2019 (14:20 IST)
இந்திய சந்தியில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிரது. குறிப்பாக ஸ்மார்ட்போன் தயாரிப்புகள், விற்பனை ஆகியவற்றில் சீன நிறுவனங்களே முன்னணியில் உள்ளது.
அந்த வகையில் சீன நிறுவனமான ஒப்போ தற்போது இந்தியாவில் அமைந்திருக்கும் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் இந்தியாவுக்கான 5ஜி மொபைல் போன் உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து ஒப்போ மொபைல் இந்தியா துணை தலைவர் மற்றும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் தஸ்லீம் ஆரிஃப் கூறியதாவது, இந்திய சந்தை வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
வியாபாரத்திற்கு ஏற்ப தற்சமயம் இருப்பதை விட இருமடங்கு புதிய ஊழியர்களை அடுத்த மூன்றாண்டுகளில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதுவித தொழில்நுட்ப சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தைக்கான சாதனங்கள் மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கு தேவையான 5ஜி சார்ந்த அம்சங்களுக்கான பணிகளும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.