ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தனது ஸ்மார்ட்போன் மீது சலுகைகளை அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக மையமான அமேசானில் வரும் 10 ஆம் தேதி முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை துவங்குகிறது. இந்த விற்பனையில் ஒன் பிளஸ் இணைந்து சலுகைகளை வழங்கியுள்ளது.
ரூ.5000 தள்ளுபடியோடு சேர்த்து தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பிரத்யேக தள்ளுபடியும், கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.