இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் செயலி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. ஜியோ காயின் செயலி குறித்த தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜியோகாயின் செயலி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் ஜியோ காயின் பெயரில் காணப்பட்ட செயலிகளை 10,000 முதல் 50,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.
செயலி மட்டுமின்றி ஜியோகாயின் பெயரில் போலி வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. போலி செயலி மற்றும் வலைத்தளம் குறித்து ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ஜியோகாயின் பெயரில் காணப்படும் அனைத்து சேவைகளும் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் டவுன்லோட் செய்து ஏமாற வேண்டாம் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது.