இலவசமாக அறிமுகமாகி, கட்டண சேவையை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் வரும் காலங்களில் கட்டணத்தை மேலும் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் வசதி மற்றும் 4ஜி இணையதள சேவையை வழங்கியுள்ளது. அதன்பின் கட்டண சேவையை அறிமுகம் செய்தது. தற்போது ஜியோ புதிதாக வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கட்டண உயர்வு எப்படி இருக்கும் என உலகின் முன்னணி தரகு நிறுவனமான கோல்டுமேன் சாச்சிஸ் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஜியோ நிறுவனம் இனி வரும் காலங்களில் கட்டணத்தை உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மறைமுகமான கட்டண உயர்வு இருக்கும். ரூபாயில் மாற்றம் இல்லாமல் அதற்கான வேலிடிட்டி நாட்கள் குறைக்கப்படும். ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டண திட்டங்களினால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தை மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
மேலும், தற்போது நிகழ்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீண்டுவிடும்.