ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,999 மதிப்புள்ள ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் மூலம் ஐந்து மாதங்கள் வரை இலவச தரவு மற்றும் ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை வழங்குகிறது. இந்த சலுகையைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் முதலில் ஜியோஃபை திட்டம் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.199:
ரூ. 199-க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1000 ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது.
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.249:
28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1000 ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் நிமிடங்களுக்கு அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது.
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.349:
ரூ. 349-க்கு 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1,000 நிமிட ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது.