அமெரிக்காவில் இந்திய ஊழியர்கள் பதற்றம்: விப்ரோ அதிரடி

வியாழன், 27 ஏப்ரல் 2017 (20:42 IST)
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஜீன் மாதத்திற்குள் அமெரிக்காவில் உள்ள விர்போ நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமான அமெரிக்கர்களை பணி அமர்த்த முடிவு செய்துள்ளது.


 

 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்ததை அடுத்து இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பெற அமெரிக்க மக்கள் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் விப்ரோ நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அதன் நிறுவனத்தில் வரும் ஜூன் மாதத்திற்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
 
இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் பலர் தாயகம் திரும்பும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோவின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்