வங்கியில் உடனடி கடன் பெறுவது எப்படி?

சனி, 15 செப்டம்பர் 2018 (13:14 IST)
வங்கியில் கடன் வாங்குவதற்கு முன் அதற்கான விதிமுறைகளை சரியாக படித்து புரிந்துக்கொண்டு வாங்க வேண்டும். ஆனால், வங்கிகளில் எளிதாக கடன் கிடைப்பதில்லை. தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கில் உடனடி கடன் பெறுவது எப்படி என காண்போம்...
 
ஹெச்டிஎஃப்சி தனியார் வங்கி மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன்களை வழங்க துவங்கியுள்ளது. இது ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கில் சிஏஎம்எஸ் லாகின் வசதியை பெற்றிருக்க வேண்டும். 
 
உடனடி கடன் பெற:
 
1. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முகப்பு பக்கத்திற்கு சென்று, பத்திரங்களுக்கு எதிரான கடன் என்கிற இணைப்பை க்ளிக் செய்யுவும்.
2. பின்னர் இன்டர்நெட் பேங்கிங் வசதிக்கு லாக் இன் செய்து அதன் பிறகு சிஏஎம்எஸ் கணக்கிற்குள் நுழையவும்.  
3. சிஏஎம்எஸ் போர்ட்டலில் நீங்கள் லோன் வாங்க விரும்பும் நிதித் திட்டத்தை தேர்வு செய்ய, வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.  
4. ஓடிபி சரிபார்ப்பு நிறைவடைந்ததும், கடன் தொகை கிடைக்கும். பின்னர் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிளை விவரங்களை பதிவிடவும்.
5. வங்கி லோன் விண்ணப்பத்தை உறுதி செய்து மற்றுமொரு ஓடிபி கிடைத்தது அதனை உறுதிப்படுத்தவும். 
6. இதோடு லோன் பெறும் செயல்முறை நிறைவடைந்ததும், லோன் தொகை உங்கள் சேமிப்பு கணக்கில் கிடைக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்