ரூ.1218-க்கு விமான சேவை: கிறிஸ்துமஸ் ட்ரீட் அளிக்கும் கோஏர்!!
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:53 IST)
விமான போக்குவரத்து சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் விமான டிக்கெட் கட்டணங்கலுக்கு சலுகை அளிப்பது அதன் தேவை அதிகரித்துள்ளது.
நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்று கோஏர் நிறுவனம். இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் மூலம் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளும் பயண முன்பதிவுகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகை முன்பதிவு கால அவகாசம் டிசம்பர் 12 முதல் 15 வரை மட்டுமே.
ரூ.1218 முதல் சலுகை விலையில் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோஏர் நிறுவனத்தின் விமானத்தில் 954.45 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 17% அதிகமாகும்.