மோடியின் அறிவிப்பு: கேஷ் ஆன் டெலிவரியை ரத்து செய்த ஈகாமர்ஸ் நிறுவனங்கள்!!
புதன், 9 நவம்பர் 2016 (17:22 IST)
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கேஷ் ஆன் டெலிவரி முறையைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்த மோடியின் அறிவிப்பு ஈகாமர்ஸ் துறையையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கேஷ் ஆன் டெலிவரியை ரத்து செய்துள்ளது.
நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அதற்கு போட்டியாக இருக்கும் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய்க்கு அதிக மதிப்புடை பொருட்களை ஆர்டர் செய்வோருக்குக் கேஷ் ஆன் டெலிவரி முறையை ரத்து செய்துள்ளது.