தாமதமாகும் வோடபோன் - ஐடியா இணைப்பு: காரணம் என்ன?

செவ்வாய், 26 ஜூன் 2018 (14:10 IST)
இந்திய டெலிகாம் சந்தையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை அடுத்து வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்காக உள்ளது. 
 
இந்த இருநிறுவனங்கள் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இயங்கும் எனவும், அதோடு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என கூறப்படுகிறது. 
 
ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைவதற்காக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளதாக தெரிகிறது. 
 
ஏனெனில் வோடபோன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.4,700 கோடி நிலுவையில் இருக்கிறது. எனவே, வோடபோன் தொலைத்தொடர்பு துறைக்கு இந்த தொகையை செலுத்த வேண்டும் அல்லது இந்த தொகைக்கு நிகரான வங்கி உத்திரவாத கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 
இந்த தொகை செலுத்தப்பட்டதற்கு பின்னரே இரு நிறுவனங்கள் இணைக்கப்படும் என தெரிகிறது. அதுவரை இணைப்பு நடவடிக்கையில் கால தாமதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்