2020-ல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன் இருக்காது!!

திங்கள், 9 ஜனவரி 2017 (11:03 IST)
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக நடந்து வருகிறது. 


 
 
இதனால் வரும் 2020-ம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்ட் மற்றும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களுக்கான தேவை இருக்காது என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
 
இந்தியா தொழில் நுட்பத்தை பயன்படுத்தவதில் பல துறைகள் புதுமைகளை படைத்து வருகின்றன. 
 
எனவே, என்னுடைய கணிப்புபடி வரும் 2020-ம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் பாயின்ட் ஆப் சேல் எந்திரங்களுக்கு தேவையே இருக்காது. 
 
மேலும், மத்திய அரசு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்