ஜியோ எதிராக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர். தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையில் அதிரடி சலுகையை வழங்கியுள்ளது.
ஜியோவின் இலவச சேவையால் சரிவை சந்திக்க தொடங்கிய பிற தொலை தொடர்பு நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை அறிவிக்க தொடங்கினர். டேட்டா பேக் மற்றும் அழைப்பு சேவை ஆகிய இரண்டியிலும் அதிரடி சலுகையை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஜியோவை விட விலை குறைவாக டேட்டா சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது இலவச இணையதள சேவையை 1 GB ஆக குறைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து 1 GB ரூ.50க்கு அறிவித்துள்ளது.
ஆனால் பி.எஸ்.என்.எல் ரூ.36க்கு 1 GB 3G சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.