இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சிறந்த மொபைல் ஆப்ஸ்: ஒரு பார்வை

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:05 IST)
ஸ்மார்ட்போன் ஆப்ஸ் நமது அன்றாட வாழ்க்கை முறைகளை விரல் நுனியில் வழங்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஸ்மார்ட்போன் பயனர்களை போன்று இந்தியாவில் ஆப்ஸ் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது.


 


அதில் சிறந்த மற்றும் பெரிதும் பயன்படுத்தப்படும் மொபைல் ஆப்ஸ் பற்றி காண்போம்.

பயணம்:

இந்தியா முழுக்கு எங்குச் செல்ல வேண்டுமானாலும் உங்களுக்கு விரல் நுனியில் பல்வேறு தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க நிறைய ஆப்ஸ்கள் இருக்கின்றன.

அவற்றில் பிரபலமான சில ஆப்ஸ் தான் மேக் மை ட்ரிப் (Make My Trip), ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் கோஐபிஐபிஓ (Goibibo).

பொழுதுபோக்கு:

காணா (Gaana) இணையம் இசையை அனுபவிக்கச் சிறப்பான செயலியாக இருக்கின்றது.

புக் மை ஷோ (Book My Show) ஆப் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

விண்க் (Wynk) ஆப் மூலம் அனைத்து இணையத்தில் உள்ள பாடல்களை கேட்க முடியும்.

கட்டணம்:

இணைய பண பரிமாற்ற சேவைகளில் பேடிஎம் (Paytm) பிரபலமான செயலியாக இருக்கின்றது.

இதை தவிர்த்து ஃப்ரீசார்ஜ் (Freecharge) மற்றும் மொபிவிக் (Mobiwik) ஆப்களும் இணைய பண பரிமாற்ற சேவைகளை சிறப்பாக வழங்குகின்றன.

கேமிங்:

சுமார் 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கும் கேம் தான் டீன் பட்டி (Teen Patti). இந்த ஆப் தயாரித்தவர்கள் வெளியிட்ட இந்தியன் ரம்மி போன்ற கேம் கூட அதிகளவு டவுன்லோடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங்:

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஏற்றச் செயலிகளாக பிளிப்கார்ட் (Flipkart), ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் இன்ஃபிபீம் (Infibeam) திகழ்கிறது. இவை அதிகளவு சலுகைகளை வழங்குவதோடு பல்வேறு பொருட்களையும் வழங்குகின்றன.

குறுந்தகவல்:

இந்தியாவில் பிரபலமான குறுந்தகவல் செயலியாக ஹைக் (Hike) இருக்கின்றது. ஆஃப்லைன் மெசேஜிங் மற்றும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளை இது வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சேவை:

நமது அனைத்து இதர சேவைகளையும் வழங்கும் செயலிகளாக ஜஸ்ட் டையல் (Just Dial), குவிக்கர் (Quikr) மற்றும் ஓஎல்எக்ஸ் (OLX) இருக்கிறது.



 

வெப்துனியாவைப் படிக்கவும்