பெட்ரோல், டீசலுக்கு பதில் பீர்!!

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (14:33 IST)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு புதிய எரிபொருளை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெற்றிக்கரமாக முடிந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மதுவில் இருக்கும் எத்தனாலை, வேதியல் தனிமங்களை கொண்டு பியூட்டனலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என கண்டறிந்துள்ளனர். 
 
எனவே, மதுவகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முயன்றனர். ஆனால், அது வாகனத்துக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, பீர் கொண்டு இதனை முயற்சி செய்ய முடிவெடுத்தனர். 
 
அதற்கான சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பீரிலிருந்து எரிபொருள் பெறும் தொழில்நுட்பம் வெற்றியடந்துள்ளதாக அந்த அராய்ச்சிக்குழு கூறியுள்ளது. அந்த எரிபொருள் வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட போது, சரியாக இயங்கியது அதோடு அதிக மைலேஜூம் அளித்தது என குறிப்பிட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்