இந்தியாவை அச்சுறுத்தும் வாரகடன்

வியாழன், 1 ஜூன் 2017 (16:23 IST)
இந்தியாவில் உள்ள வங்கிகளில் பல மடங்கு வாரகடன் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.


 

 
வங்கியின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச் மாதம் காலாண்டு வரை வாரகடன் அதிகம் வைத்துள்ள வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் 35,098.25 கோடி ரூபாய் வராகடன் உள்ளது. 
 
ஐடிபிஐ வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் 44,752.59 கோடி ரூபாய் வராகடன் உள்ளது.
 
சென்ட்ரல் வங்கி வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில் 27,250,.33 கோடி ரூபாய் வராகடன் உள்ளது.
 
பாங்க் ஆப் இந்தியா வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில் 52,044.52 கோடி ரூபாய் வராகடன் உள்ளது.
 
பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய மொத்த கடன் தொகையில், 55,370.45 கோடி ரூபாய் வராகடன் உள்ளது. 
 
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நிறுவனம் வழங்கிய கடன் தொகையில், 22,859.27 கோடி ரூபாய் வராகடனாக உள்ளது.
 
தேனா வங்கி வளங்கி அளித்துள்ள மொத்த கடன் மதிப்பில், 12,618.73 கோடி ரூபாய் வராகடன் வைத்துள்ளது.
 
கனரா வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில், 34,202.04 கோடி ரூபாய் வராகடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
இந்த வாரகடன் வங்கிகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய பெரிய தொழிலதிபர் தங்கள் வாரகடனை செலுத்தாமல் உள்ளனர். இதானல் குறைந்த அளவில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்