வங்கி ஊழியர்கள் போராட்டம்: பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம்!!

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (09:58 IST)
நாடு முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 



 
 
சில கோறிக்கைகளை வலியுருத்தி மத்திய அரசுடன், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எஃப்.பி.யு) நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தது. எனவே போரட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
 
வங்கி ஊழியர்களின் கோறிக்கை சில....
 
# பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 
 
# வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
 
# வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். 
 
# வங்கித் துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிட வேண்டும்.
 
# காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்