ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விற்பனையை இந்தியாவில் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
ஆம், ஐபோன் விற்பனை மந்தமாக உள்ளதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம் ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக ஐபோன் 6 விற்பனையை இந்தியாவில் நிறுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இந்தியாவில் விற்பனை 35%க்கு கீழே இருக்கும் கடைகளிலிருந்து ஐபோன் 6 மொபைல்களை திரும்பப் பெற உள்ளதாம். மேலும், ஐபோன் 6s மற்றும் ஐபோன் 6s பிளஸ் மொபைல்களின் பேசிக் விலையை உயர்த்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல் முதலாக ஐபோன் வாங்க விரும்புவோர் பெரும்பாலும் தேர்வு செய்யும் மாடல் ஐபோன் 6. ஆனால், இந்த மொபைலைத்தான் இந்தியாவில் விற்பதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே விலை அதிகமாக உள்ளதால்தான் பலரும் ஐபோனை வாங்குவதில்லை. இந்நிலையில் மேலும் விலையை ஆப்பிள் உயர்த்துவதால் விற்பனை மேலும் குறையும் என கூறப்படுகிறது.