ஆட்குறைப்பு நடவடிக்கைளில் அமேசான் தீவிரம்!

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (21:07 IST)
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தற்போது அமெரிக்காவில் துவங்கப்பட்டாலும் மற்ற நாடுகளில்லும் விரைவில் மேற்கொள்ளபடுமாம்.
 
பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. மேலும், பல நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கி வருகிறது. இந்நிறுவனம் எலெட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் பல சரக்கு என பல வகையான வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிறுவனத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு புதிதாக பணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அந்நிறுவனம் சில நூறு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. 
 
சியாட்டிலில் அமேசான் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் கணிசமானோரை ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்